/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/994_2.jpg)
இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் மிருகமாய் மாற'. இப்படம் வருகிற 18 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தது படக்குழு. அதில் சசிகுமார், கதாநாயகி ஹரிப்பிரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.
அப்போது சசிகுமார் பேசுகையில், "இது ஒரு வயலண்டான கதை. ஆனால், அதற்குள் ஒரு குடும்பம், குழந்தை, மனைவி என இருந்தது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இப்படத்தில் அதிகக் காட்சிகளில் மழை இருக்கும். அதனால் மழை இப்படத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்.
இப்படத்தில் நான் சவுண்ட் என்ஜீனியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹீரோயின் ஹரிபிரியா என்னைப் பார்த்து ரொம்ப பயந்தாங்க. அதற்கான காரணத்தை நான் சொல்லிவிடுகிறேன். எங்களுடைய காட்சிகள் எல்லாம் தன்மையான முறையில் தான் இருந்தது. அவருடன் எந்த ஆக்சஷன் காட்சிகளும் படமாக்கப்படவில்லை. அதனால் என் ஆக்சஷன் காட்சிகளைப் பார்த்து பயந்தாங்க. இப்படத்தைத்தொடர்ந்து இயக்குநர் சத்யசிவாவின் அடுத்த படத்திலும் நடிக்கிறேன்" எனப் பேசினார்.
பின்பு இப்படம் தலைப்பு மாற்றப்பட்டது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சசிகுமார், "இந்தப் படம் முதலில் 'காமன் மேன்' என்ற தலைப்பில் தான் இருந்தது. ஆனால் அந்த தலைப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. இந்த தலைப்பை ஏற்கனவே ஒருத்தர் வைத்திருந்தார். பின்பு எங்களுக்கும் கொடுத்திருந்தாங்க. இப்பலாம் ஒரு டைட்டிலுக்கு 25 லட்சம், 50 லட்சம் கேக்குறாங்க. அதன் காரணமாக தயாரிப்பாளர் வேண்டாம் என முடிவெடுத்துவிட்டார்." என வேதனையுடன் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)